நகரசபை வசமுள்ள கடை அறைகளை வாடகைக்குக் கொடுத்தல்
கடை அறைகள் பற்றிய தகவல்கள் | கடை எண்ணிக்கை |
புதிய வர்த்தக தொகுதி | 89 |
நிவ்ஹெம் வீதி புதிய வர்த்தக தொகுதி | 16 |
கொழும்பு வீதி புதிய வர்த்தக தொகுதி | 53 |
சணச பிரீடம்பார்க் வர்த்தக தொகுதி | 25 |
பூங்கா வீதி கடை | 11 |
நீர்கொழும்பு வீதி கடை | 18 |
சந்தை பூமி கடை | 3 |
பூங்கா வீதி புதிய வர்த்தக தொகுதிக்கு முன்னால் உள்ள பூமியிலிருக்கும் கடை | 18 |
புதிய வர்த்தக தொகுதி தேநீர் கடை | 1 |
பஸ் நிலையத்துக்கு எதிரில் புதிய இரண்டு மாடி வர்த்தக தொகுதி | 6 |
பழைய நகரசபை கட்டிடத்தில் உள்ள கடை | 2 |
இறைச்சிக் கடை | 5 |
மீன் கடை | 5 |
பராக்கிரம விளையாட்டு மைதானத்தில் உள்ள கடை | 1 |
- இந்த கடை அறைகள் கேள்விப்பத்திர நடவடிக்கைமுறையின் ஊடாக ஆகக்கூடிய விலை குறித்தவருக்கு வழங்கப்படுகிறது.
- வெற்றிடமாகின்ற கடை அறைகளுக்கு கேள்விப்பத்திரம் கோரல் தேசிய பத்திரிகைகள் மூலம் பகிரங்கப்படுத்தப்படும்.
நகரசபை வசமுள்ள விளையாட்டு மைதானங்களையும் வெற்று காணிகளையும் வாடகைக்கு வழங்குதல்
பராக்கிரம விளையாட்டு மைதானம்
- நாளொன்றுக்கு ரூ.2000.00 அறவிடப்படுகின்றது.
- மின்சார பாவணைக்கு பயன்பாட்டின் பிரகாரம் தனியான கட்டணமொன்றைச் செலுத்த வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அல்லது அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொண்டு பூர்த்திசெய்து பணம் செலுத்தி தேவையான திகதியை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
- விளையாட்டு மைதானத்துக்கு சேதமேற்படும்வகையில் தற்காலிகமாகவாவது நிர்மாணங்களை மேற்கொள்ள அனுமதியில்லை.
வெற்று காணிகள்- சந்தை பூமியில் வெளியான பகுதி
- சதுர அடி ஒன்றுக்கு ரூ.5.00 வீதம் தினசரி அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.
- பூர்வாங்க எழுத்துமூல அனுமதியை நகரசபையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
எலிஸ்பார்க் மைதானம்
- பகல் நேரத்தில் நகரசபையின் வாகன தறிப்பிடமாகப் பயன்படுத்தப்படுவதால் அப்பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் விண்ணப்பதாரர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு தினசரி வாடகை அடிப்படையில் வழங்கப்படும்.
- சுமார் ரூ.2000.00 கட்டணத்திற்கு உட்பட்டு தேவைக்கேற்ப கட்டணம் அறவிடப்படும்.
காணிகள் மற்றும் கட்டிடங்களின் உரித்து மாறுவதை பதிவுசெய்தல்
- விண்ணப்ப படிவத்தை இந்த இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து அல்லது அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சேவைக் கட்டணமாக ரூ.500.00 செலுத்த வேண்டும்.
- காணி உறுதி மற்றும் வரைபடம் பிரகாரம் நொத்தாரிசு ஒருவரைக்கொண்டு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்துகொள்ளுதல்.
- காணி உறுதியின் மற்றும் வரைபடத்தின் துணை பிரதியுடன் நகரசபை அலுவலகத்தில் ஒப்படைத்தல்.
கவனிக்கவும்
- பெயரை மாற்றுகின்றபோது தற்போது மதிப்பீட்டு வரி பதிவேட்டில் இருக்கின்ற குறித்த சொத்தின் உரித்தாளரின் பெயரிலிருந்து தற்போதைய விண்ணப்பதாரர்வரை முறையே உரித்து மாறியுள்ள முறையை நொத்தாரிசு விண்ணப்பத்தில் எழுதி சான்றுப்படுத்த வேண்டும்.
மதிப்பீட்டு வரி பொழிப்பை வழங்குதல்
- நொத்தரிசு ஒருவர் ஊடாக எழுத்துமூலம் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பத்தை நகரசபை செயலாளருக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.
- ஒரு வருடத்திற்கு அல்லது சில வருடங்களுக்கான தகவல் வழங்கப்படுகின்றது.
- பிரதிபண்ணும் கட்டணம் - ஒரு வருட பொழிப்புக்கு ரூ.10.00.
- வைப்புகள் - ஒரு வருட பொழிப்புக்கு ரூ.5.00.
வியாபார அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- ஒவ்வொரு வருட ஆரம்பத்திலேயே ஒவ்வொரு வியாபாரத்திற்கான வியாபார அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- வியாபாரத்திற்கு உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்காக வருடத்தின் முதல் மாதத்தில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
- விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்து ஒப்படைத்ததன் பின்னர் வருமான பரிசோதகர் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர் ஆகியோரின் பரிந்துரையைப் பெற்றுக்கொண்டு அதன் பிரகாரம் வியாபார அனுமதிப்பத்திர கட்டணங்களைச் செலுத்தி குறித்த வருடத்திற்கு வியாபார அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- எதிர்வரும் ஆண்டுக்கான வியாபார அனுமதிப்பத்திர கட்டணங்கள் ஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.
வாகன தறிப்பிட பராமரிப்பு
நகரசபை வசம் 05 வாகன தறிப்பிடங்கள் இருக்கின்றன.
- பழைய வார சந்தை காணி.
- எலிஸ் பார்க் மைதானம்.
- நிவ்ஹெம் வீதி வலப்பக்கம் உள்ள நகரசபையின் காணி.
- நிவ்ஹெம் வீதி இடப்பக்கம் உள்ள நகரசபையின் காணி.
- நகரசபைக்குரிய க்ளினிபெத் கட்டிடத்துக்கு முன்பக்கமுள்ள காணி என்ற நகரசபை வசமுள்ள 05 வாகன தறிப்பிடங்கள்.
வாரசந்தை மற்றும் தினசரி வியாபார நிர்வாகவும் பராமரிப்பும்
மினுவங்கொட நகரசபையின் திவிநெகும வார சந்தை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுகின்றன. அத்துடன் வார சந்தையில் கடைகளைப் பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து பின்வருமாறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
வார சந்தை கட்டணங்களை அறவிடல்
ஒரு வியாபார கூடத்திற்கு | ரூ.250.00 |
02 வியாபார கூடங்களுக்கு | ரு.700.00 |
- வார சந்தை முடிவில் முழு சந்தை பூமியையும் சுத்தப்படுத்துதல் மற்றும் தினசரி பராமரிப்பு பணிகளைச் செய்தல் என்பவை நகரசபை பணியாட் தொகுதியினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
- நகரத்தில் வியாபாரத்திற்காக அனுமதி பெற்றுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தினசரி தற்காலிக வர்த்தக வியாபாரத்திற்கு ஆகக்குறைந்த கட்டணம் 100.00 ரூபாவாகும்.
அறிவித்தல்கள் மற்றும் விளம்பர பலகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்கல்
- விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து எழுத்துமூல அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டணங்கள்
தற்காலிக பதாகைகளுக்கு சதுர அடிக்கு | ரூ.50.00 - ஒரு மாதம் |
விளம்பர பலகை நிரந்தரமானது | ரூ.100.00 - ஒரு வருடம் |
இணைப்பாக்கம்
பெயரும் பதவியும் | முகவரி | தொலைபேசி இல | தொலைநகல் | மின்னஞ்சல் |
திரு ஜகத் சொய்சா வருமான பரிசோதகர் |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட. | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
திரு லஹிரு கரணாரத்ன வருமான பரிசோதகர் |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட. | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
திருமதி ரொசாந்தி சொய்சா முகாமைத்துவ உதவியாளர், வருமான விடயத்துக்குப் பொறுப்பு |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட. | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |