குப்பை முகாமைத்துவம்
நீர்கொழும்பு, கட்டுநாயக்க, குருணாகல், கம்பஹா, நிட்டம்புவ, திவுலபிட்டிய, ஜா-எல போன்ற பிரதான இடங்களை இணைக்கின்ற மையநிலையமாக முக்கியத்துவம் பெறுகின்ற மினுவன்கொட நகரில் தினசரி சுமார் 3500 மக்கள் புழங்குகின்றனர்.
மக்கள் தொகை அதிகரித்திருப்பதும் தினசரி குடிவருகின்ற மக்கள் ஊடாகக் கிடைக்கின்ற குப்பைகளின் அளவு அதிகரித்திருப்பதும் மக்களின் அலட்சியமான செயற்பாடுகள் காரணமாக சூழலின் அழகு குழைகின்றவிதத்தில் தினசரி பெருமளவில் குப்பைகள் சேர்கின்றன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்குடைய செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் பின்பற்றுவதன் ஊடாக சூழல் நேயம்கொண்ட ஆரோக்கியமான சூழலொன்றை எதிர்கால சந்ததியினருக்கு சொத்தாக ஒப்படைப்பது எமது ஒரே நோக்கமாகும்.
மினுவங்கொட திட்டமிட்ட குப்பைகள் முகாமைத்துவ கருத்திட்டத்தின் பிரதான பிரிவுகள்
- வீதிகளைக் கூட்டுதல் - (காலை 6.00 - 10.30 வரை மூன்று நகர மத்திய சேவகிகள் மூவர் மற்றும் ஒரு ஊழியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 10.30 மணியின் பின்னர் பிரதான பாதைகள் சுத்திகரிக்கப்படும்)
குப்பை முகாமைத்துவத்திற்காக நகரசபை வசமுள்ள வளங்கள்
உழவு இயந்திரங்கள் | 04 |
கைவண்டிகள் | 04 |
மலமகற்றும் பவுசர் | 01 |
டிப்பர் | 02 |
வீதி குப்பைகளைச் சேகரிப்பதற்கு ஒரு வாகனத்திற்கு இரண்டு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீதியிலும் உக்கிப்போகின்ற குப்பைகள் தினசரி சேகரிக்கப்படுகின்றன. அத்துடன் பிரதான வீதிகளில் இரவு பகல் சேவை 02 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிரதேசவாசிகளிடமிருந்து சேகரிக்கப்படுகின்ற வீட்டிலிருந்தே வகைப்படுத்திப் பெற்றுக்கொள்ளுகின்ற அதேநேரத்தில் குடிவருகின்ற மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்ற குப்பைகள் ஜாபால பிரித்தெடுக்கும் நிலையத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.
கடுதாசி, காகித அட்டைகள், இரும்பு, பத்திரிகைகள் போன்றவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்துடன் மீள் சுழற்சிக்குட்படுத்த முடியாத குப்பைகள் ஹொல்சிம் நிறுவனத்திற்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அனுப்பப்படுகின்றன.
உக்கிப்போகும் குப்பைகள் சேதனப் பசளையாக்கப்படுகின்றன.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை குப்பை சந்தையொன்றை நடாத்தி பிரதேசத்தில் உற்பத்தியாகின்ற பெறுமதிமிக்க குப்பைகளை பிரதேசவாசிகளுக்கு விற்பனைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதன்மூலம் நகரசபைக்கு கிடைக்கும் குப்பைகளின் அளவு குறையும்.
மலம் கழிவுப்பொருள் அகற்றல்
மலமகற்றும் சேவையைப் பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணம்(இக்கட்டணம் காலத்துக்குக் காலம் திருத்தப்படும்).
இடம் | நகர எல்லைக்குள் | நகர எல்லைக்கு வெளியே | ||
1 முறை | அதிகரிக்கும் முறைக்கு | 1 முறை | அதிகரிக்கும் முறைக்கு | |
ஒரு வீட்டிலிருந்து | ரூ. 1750.00 | ரூ. 1000.00 | ரூ. 2500.00 | ரூ. 1500.00 |
ஒரு வியாபார இடத்திலிருந்து | ரூ. 2500.00 | ரூ. 1750.00 | ரூ. 4000.00 | ரூ. 2000.00 |
தொழிற்சாலை சுற்றுலா ஹோட்டல் | ரூ. 3000.00 | ரூ. 2250.00 | ரூ. 5000.00 | ரூ. 2500.00 |
அரச நிறுவனம் | ரூ. 1250.00 | ரூ. 750.00 | ரூ. 2000.00 | ரூ. 1500.00 |
மதம் மற்றும் ஏனைய நலனோம்பல் இடங்கள் | ரூ. 1000.00 | ரூ. 750.00 | ரூ. 1500.00 | ரூ. 1000.00 |
கட்டணம் கணிப்பிடப்படும் முறை
- 1 முறைக்கு - அகற்றும் கட்டணம் + போக்குவரத்து கட்டணம் + அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரி
- அகற்றும் கட்டணம் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப வேறுபடும்.
- சேவைக் கட்டணம் 10%.
- போக்குவரத்து கட்டணம் நகரசபை அதிகார பிரதேசத்தில் ரூ.750.00, நகரசபை எல்லைக்கு வெளியில் அதிகரிக்கும் தூரத்திற்கு ஏற்ப 1 கிலோ மீற்றருக்கு ரூ.40.00 வீதம் அறவிடப்படும்.
- அகற்றும் கட்டணம் ரூ.900.00 வீதமும் அறவிடப்படும்.
மலமகற்றும் சேவைக்கு விண்ணப்பிக்கும் முறை
- குறித்த விண்ணப்ப படிவத்தை நகரசபை அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
- விண்ணப்ப படிவத்தைப் பூர்திசெய்து ஒப்படைக்கும்போது குறித்த கட்டணம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அத்துடன் மேற்படி பணத்தைச் செலுத்தி மலமகற்றும் சேவையைப் பெற்றுக்கொள்ளுவதற்கு அண்ணளவாக திகதியொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- நீங்கள் கோரும் திகதி தவிர்க்க முடியாத காரணங்களால் வேறுபடலாம். ஆகவே திகதி உறுதிப்படுத்தப்பட்டு உங்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்படும்.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
- மலசலகூட குழியில் கழிவுப்பொருள் மலமகற்றும் சேவையை வழங்கக்கூடிய வகையில் அதாவது திரவ நிலையில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
- அத்துடன் மலசலகூட குழி 10 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்ததாக இருந்தால் எங்களுடைய உத்தியோகத்தர் ஒருவர் நிலைய பரிசோதனைக்கு வரலாம்.
- மலமகற்றும் வாகனத்தின் குழாய் 40 அடி நீளமிருப்பதால் மலமகற்றும் வாகனம் நிறுத்தப்படும் இடத்திலிருந்து மலசலகூட குழி இருக்கும் தூரம் அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
சூழல் அனுமதிப் பத்திரம் வழங்கல்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொகுப்புக்கு அமைவாக மினுவன்கொட நகரசபை அதிகார பிரதேசத்தில் சூழல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிறுவனங்களை இனம் கண்டு, அந் நிறுவனங்கள் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படும்.
சூழல் அனுமதிப்பத்திர கட்டணம் | ரூ. 1,000.00 |
சூழல் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் விண்ணப்ப படிவ கட்டணம் | ரூ. 500.00 |
பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளுகின்ற விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்ததன் பின்னர் மூவர் அடங்கிய குழுவினால் குறித்த சூழல் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர், சூழல் அனுமதிப்பத்திரம் வழங்குவது பொருத்தமானதா இல்லையா என்பது பரிந்துரைக்கப்படுகின்றது. பரிந்துரைக்கப்பட்ட அனுமதிப்பத்திரம், சூழல் தொழில்நுட்ப குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு சூழல் உத்தியோகத்தர் உட்பட தொழிநுட்ப குழு உத்தியோகத்தர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.
தொழில்நுட்ப குழுவில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் நியாயமான காலவரையறைக்குட்பட்டு குறித்த குறைபாடுகளைப் பூர்திசெய்யும்படி எழுத்துமூலம் அறிவிக்கப்படும். அங்கீகாரம் பெறப்பட்ட சூழல் அனுமதிப்பத்திரங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் காலாவதியாவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அறிவித்து நீடிக்கப்படும்.
குறைபாடுகள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுக்கு சூழல் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அத்துடன் குறைபாடுகள் பூர்த்திசெய்யப்படாத விண்ணப்பப் படிவங்களுக்கான சூழல் அனுமதிப்பத்திரம் ஒழிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரித்தல்
- நகரசபைக்கு எழுத்துமூலம் முறைப்பாட்டாளர்களின் உண்மையான தகவல்களுடன் சமர்ப்பிக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக மிகத் துரிதமாக விசாரணைசெய்து சிக்கல் இருந்தால் தீர்த்துக்கொண்டு எழுத்துமூலம் குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்படும்.
- தொலைபேசி இணையவழி விசாரணைகளின்போதும் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்துகொள்ளப்படும். அத்துடன் அதுபற்றிய பிந்திய நிலையை குறித்த காலவரையறையின் முடிவில் மீண்டும் ஒருமுறை அழைத்து அறிந்துகொள்ள இயலும்.
இணைப்பாக்கம்
பெயரும் பதவியும் | முகவரி | தொலைபேசி இல | தொலைநகல் | மின்னஞ்சல் |
பொதுசுகாதார பரிசோதகர் |
மினுவங்கொட நகர சபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
திரு. காஞ்சன மதுரங்க சுகாதார நிர்வாகி |
மினுவங்கொட நகர சபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |