நகர சபை அதிகாரப் பகுதியின் நிலப்பரப்பு,மக்கள் தொகை மற்றும் வரைபடங்கள்.பெரியளவில் காண, படத்தின் மீது கிளிக் செய்யவும்
பூகோள அமைப்பு
1960ஆம் ஆண்டு சிறிய நகர சபையாக இருந்துவந்து 1971ஆம் ஆண்டில் நகர சபையாக ஸ்தாபிக்கப்பட்ட மேல் மாகாணத்தில், கம்பஹா மாவட்டத்தில் வடக்கு அழுத்குரு கோறலையில் தாசிய பத்துவில் மினுவன்கொட தேர்தல் தொகுதிக்கு உரிய, மினுவன்கொட நகர சபை அதிகார பிரதேசம் 4.4 சதுர கிலோமீற்றர்களாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 15 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள மினுவன்கொட நகரத்தின் வெப்பநிலை 30ºC பாகையாகும். வருடாந்த மழை வீழ்ச்சி 200 - 225 அங்குலத்திற்கு இடைப்பட்டதாகும். 400 ஹெக்டயார் நிலப்பகுதியைக் கொண்டுள்ள இப் பிரதேசத்தின் வதிவிட சதவீதம் சுமார் 60% மாகும். சுமார் 20% வயல் நிலங்களைக் காணக்கூடியதாக இருக்கின்ற இதில் வாணிப கைத்தொழில், அரச நிறுவனங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானம் பாதைகள் என்பவற்றுக்கும் ரபர், தெங்கு போன்றவற்றிற்கும் மிகக் குறைவான நிலப்பிரதேசத்தை தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது.
05 மாவட்டங்களை இணைக்கின்ற பிரதான பாதை முறைமையொன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மினுவன்கொட நகரத்திற்கு 20 நிமிட தூரத்தில் இலங்கையின் பிரதான விமான நிலையம் அமைந்துள்ளது. கண்டி - விமான நிலைய பாதையும், கொழும்பு - குருநாகல் பாதையும், கம்பஹா - நீர்கொழும்பு பாதையும் இந்த நகரத்தின் மத்தியில் செல்கின்றது.
நகரசபை அதிகார பிரதேசத்தில் சனத்தொகை தகவல்கள் (2014)
இலக்கம் | கிராமசேவையாளர் பிரிவு | சனத்தொகை | நிலப்பரப்பு (ஹெக்டயார்) |
ஆண் | பெண் |
125 | மத்திய மினுவன்கொட | 1085 | 50.2 | 564 | 521 |
125/1 | மினுவன்கொட மேற்கு | 1174 | 67.61 | 574 | 600 |
125/2 | மினுவன்கொட வடக்கு | 1287 | 60.32 | 594 | 693 |
125/3 | மினுவன்கொட கிழக்கு | 2723 | 30.36 | 1225 | 1498 |
126/2 | புருல்லபிட்டிய | 1020 | 40.48 | 460 | 560 |
126/3 | அம்பகஹாவத்த | 1385 | 35.27 | 795 | 590 |
மொத்தம் | 8674 | 284.24 | 4212 | 4462 |
இனங்களின் பிரகாரம்
இலக்கம் | கிராமசேவையாளர் பிரிவு | சிங்களம் | தமிழ் | முஸ்லீம் | வெளிநாடு | வேறு |
125 | மத்திய மினுவன்கொட | 773 | 47 | 245 | 20 | 1085 |
125/1 | மினுவன்கொட மேற்கு | 1140 | 3 | 31 | 1174 | |
125/2 | மினுவன்கொட வடக்கு | 1252 | 9 | 26 | 1287 | |
125/3 | மினுவன்கொட கிழக்கு | 2706 | 8 | 9 | 2723 | |
126/2 | புருல்லபிட்டிய | 930 | 88 | 2 | 1020 | |
126/3 | அம்பகஹாவத்த | 1169 | 11 | 205 | 1385 | |
மொத்தம் | 7970 | 166 | 518 | 20 | 8674 |
மதங்களின் பிரகாரம்
இலக்கம் | கிராமசேவையாளர் பிரிவு | பௌத்தம் | இந்து | றோ.க | இஸ்லாம் | வேறு |
125 | மத்திய மினுவன்கொட | 726 | 46 | 71 | 242 | |
125/1 | மினுவன்கொட மேற்கு | 999 | 2 | 12 | 31 | 135 |
125/2 | மினுவன்கொட வடக்கு | 1222 | 39 | 36 | ||
125/3 | மினுவன்கொட கிழக்கு | 2640 | 1 | 73 | 9 | |
126/2 | புருல்லபிட்டிய | 420 | 42 | 556 | 2 | |
126/3 | அம்பகஹாவத்த | 1019 | 11 | 150 | 205 | |
மொத்தம் | 7021 | 102 | 901 | 515 | 135 |