கவனம் செலுத்துங்கள்
- காணி 6 (ஆறு) பர்ச்சஸ்க்கு மேல் இருக்க வேண்டும்.
- 10 வருட காலவரையறைக்குள் காணி திட்டத்தை (வரைபடத்தை) நகரசபை அங்கீகரித்திருத்தல்.
- வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அளவு பௌதிகரீதியாக இருக்கின்றதா என்பது.
- அபிவிருத்திப் பணிகளுக்காக சுவீகரிப்பதற்கு அல்லது ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட காணியாக இருத்தலாகாது.
- வயல், சேனைப் பயிரிடும் காணி அல்லது புற்றரைகளாகக் கருதும் காணி அபிவிருத்தி செய்யப்படுமானால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து இசைவு சான்றிதழைப் பெற்றுக்கொள்க.
- காணியில் இயற்கையாகவே நீர் வழிந்தோடும் வழிகள் உண்டா என்பதும் அவ்வாறு இருந்தால் அது பிரதான நீர் வழிந்தோடும் வழியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதும்.
- மழை நீரை முகாமைப்படுத்தக்கூடியதாக இருத்தல்.
- காணியின் எல்லைகளில் மண் வெட்டுவதனால் நேரடியாகப் பள்ளங்கள் இருக்கின்றனவா என்பதும் அயலில் உள்ள காணி உரிமையாளர்களின் செயல்களால் அத்தகைய நிலை ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உண்டா என்பதும்.
- கூடிய வலுவுள்ள மின்கம்பிகள், மின் கம்பங்கள், தொடர்பாடல் கம்பங்கள் காணிக்குள் அல்லது காணிக்கு மேல் இருக்கின்றனவா என்பது.
- ஆறுகள், கால்வாய்கள், கல் மலைகள், பிரதான வடிகால் என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டவை காணிக்குள் இருக்கின்றனவா என்பது.
- காணியின் நுழைவுப் பாதை பௌதிக ரீதியாக அமைக்கப்படாவிட்டால் தடையின்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றதா என்பது.
- நுழைவுப் பாதைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் பாதுகாக்கப்பட்ட காணி திட்டத்தில் அடையாளமிடப்பட்டிருந்தால் அந்த நிலப்பகுதி பௌதிக ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது.
- காணிக்குள் நுழையும் பாதை குறைந்தபட்சம் 10 அடி இருக்க வேண்டும். அத்துடன் உரியவகையில் வாகனம் திருப்புவதற்கு இடமுண்டா என்பது.
- காணித்துண்டுக்கான நுழைவுப் பாதையின் அகலம் காணித் துண்டின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக இருக்கின்றதா என்பது.
- அங்கிகரிக்கப்பட்ட காணித்துண்டின் திட்டத்தில் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை உரியவாறு நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது.
- காணித்துண்டுக்கான நுழைவுப் பாதையைப் பெற்றுக்கொள்ளுகின்ற பாதையில் பிரவேசிப்பதற்கு பௌதிகரீதியில் தடையுண்டா என்பது.(உதா: மின்சாரம், தொலைபேசி கம்பங்கள், பாரிய பாறை, நீர் வழிந்தோடல், வீடுகளின் பகுதிகள்)